இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கிரிக்கெட் போட்டியும் விளையாட வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை இரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த முடியாது என்று ரிஜிஜு தெரிவித்துள்ளார். மதுராவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஒற்றுமை பிரச்சாரத்தின் போது கிரண் ரிஜிஜு இதனைத் தெரிவித்தார்.


தேசிய ஒருங்கிணைப்பு பிரச்சாரத்தின் கீழ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மதுரா சென்றிருந்தார். இந்நிகழ்வன் போது கிரண் ரிஜிஜு, ஊடகங்களுடன் பேசியபோது, ​​இந்தியாவின் நம்பிக்கையை வென்றெடுக்க பாகிஸ்தான் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறினார். 


எல்லையைத் தாண்டி இயங்கும் பயங்கரவாத இயந்திரங்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். வெறும் சொல்லாட்சியால் எதுவும் நடக்காது, பாக்கிஸ்தான் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும், அப்போதுதான் பாகிஸ்தானுடனான உறவுகள் இயல்பாக்கப்படும் என்றும் ரிஜிஜு தெரிவித்தார். 


சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய ரிஜிஜு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இது அவசியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியால் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும் என பெருமிதம் தெரிவித்த ரிஜிஜு, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பதை நாட்டின் 130 கோடி மக்கள் தேசிய மட்டத்திலிருந்து வெளிப்படுத்தியுள்ளனர்’ என குறிப்பிட்டு பேசினார். மேலும் மேடியின் அரசு உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.