திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் (Sree Padmanabhaswamy Temple) அக்டோபர் 15 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தலைமை பூசாரி பெரியநம்பி உட்பட பன்னிரண்டு கோயில் ஊழியர்கள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், கோவிலில் தினசரி பூஜைகள் தேவைப்படும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் தொடரும்.


கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து மார்ச் 21 ஆம் தேதி மூடப்பட்ட ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில், பின்னர் கடுமையான COVID-19 வழிகாட்டுதலின் கீழ் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.


ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா


இதற்கிடையில், கடந்த இரண்டு வாரங்களில், சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. எனினும், கேரளாவின் நிலைமை இதற்கு மாறாக உள்ளது. கேரளா, பூஜ்ஜியத்திலிருந்து 10,000 COVID நோயாளிகள் என்ற எண்ணிக்கையை ஆறு மாதங்களில் அடைந்தது.


இப்போது தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு சாட்சியாக உள்ளது அந்த மாநிலம். கடந்த இரண்டு வாரங்களில் கேரளாவின் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக 92,246 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.


மகாராஷ்டிரா (Maharashtra) மற்றும் கர்நாடகாவில் மட்டுமே சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிகை கேரளாவை விட அதிகமாக உள்ளது. ஆனால் அந்த மாநிலங்களில் தொற்றின் பரவும் வேகம் குறைவாக உள்ளது.


கடந்த வாரத்தில் மிக மோசமான தொற்றுநோய்களைக் கொண்டதாகக் கணக்கிடப்பட்ட 10 மாவட்டங்களில் எட்டு கேரளாவில் உள்ளன. இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20% க்கும் அதிகமாக உயர்ந்தது.


வியாழக்கிழமை, கேரளாவில் COVID-19-ஆல் புதிதாக 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2,71,439 பேர் கண்காணிப்பில் உள்ளனர். வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் 2,42,056 பேரும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 29,383 பேரும் உள்ளனர்.


ALSO READ: தமிழகத்தில் தொடர்கிறது COVID தாண்டவம்: 10,000-ஐத் தாண்டியது இறப்பு எண்ணிக்கை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR