மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ். (MTS- Multi Tasking Staff) மற்றும் சி.ஹெச்.எஸ்.எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) ஏப்ரல் 15 அன்று தெரிவித்துள்ளது. புதிய முடிவு ஜனவரி 1, 2024 முதல் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!



அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மத்திய ஆயுதக் காவல் படையில் (சிஏபிஎஃப்) உள்ளூர் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சஷாஸ்த்ரா சீமா பால் (SSB) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவை CAPFகள் ஆகும். இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் கிடைக்கும்.


மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?


"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு முக்கிய முடிவில், உள்துறை அமைச்சகம் CAPF களுக்கான கான்ஸ்டபிள் (பொது கடமை) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளித்துள்ளது" என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ