வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

Traffic Challan New Rules: பைக் ஓட்டும்போது நீங்கள் ஹெல்மெட் அணிந்து சென்றாலும் கூட, புதிய போக்குவரத்து விதியின் கீழ் உங்களுக்கு அபராதம் விதிக்க இயலும். எனவே, அதுகுறித்த தகவல்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2023, 10:51 PM IST
  • ஹெல்மெட்டை முறையாக அணிந்திருக்க வேண்டும்.
  • BIS முத்திரை உடன் ஹெல்மெட் இருக்க வேண்டும்.
வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா? title=

Traffic Challan New Rules: நீங்கள் தினமும் அலுவலகத்திற்கோ அல்லது வேலை சார்ந்தோ பைக் ஓட்டுபவராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான தகவலாகும். தற்போது, போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாகிவிட்டன. பைக் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.

இப்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்குக் கூட போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் போடுவதைப் பார்க்க முடியும். புதிய போக்குவரத்து விதிகளின்படி, நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், உங்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க | ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா...?

புதிய விதிகள்

புதிய போக்குவரத்து விதிகளின்படி, மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஓட்டும் போது ஹெல்மெட் ஸ்டிரிப் அணியாமல் இருந்தால், விதி 194D மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன், உங்கள் ஹெல்மெட் மோசமாக இருந்தாலோ, அல்லது BIS முத்திரை இல்லாமல் இருந்தாலோ; நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். 

ஹெல்மெட் அணிந்த பிறகும், புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்குகிறது.

அபராதத்தை எப்படி தெரிந்துகொள்வது? 

உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://echallan.parivahan.gov.in) பார்வையிடலாம். அதில் நீங்கள் உங்கள் அபராதத்தை குறித்தும், அதன் ஸ்டேடஸ் குறித்தும் சரிபார்க்கலாம். அதில், சலான் எண், வாகன எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். உங்கள் வாகன எண்ணைத் உள்ளீடு செய்து அனைத்து விவரங்களையும் நிரப்பவும். இதற்குப் பிறகு, உங்கள் அபராதத்தின் ஸ்டேடஸை பார்ப்பீர்கள். 

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால், 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதையெல்லாம் தவிர்த்து, அவ்வாறு செய்தால் டன்னுக்கு ரூ.2,000 கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இனி இலவசமாக மளிகை பொருள்கள்... அரசின் சிறப்பான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News