இன்று கார்த்திகை பூர்ணிமா விழாவையொட்டி பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாராய்  என்னும் புனித தலத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதியில் இறங்கி நீராடினர். அப்போது  கூட்டத்தின் ஒரு பகுதியில் வதந்தி பரவியது. இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரை ஒருவர் முண்டியடித்து வெளியேற நினைத்து உள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 


இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.