மழையினால் ஸ்தம்பித்து போயுள்ள ஹைதராபாத்... தயார் நிலையில் அவசர கால குழு..!!
ஹைதராபாத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத்: வெப்பம் மற்றும் புழுக்கமான ஏப்ரல் மாதத்திற்கு பெயர் பெற்ற ஹைதராபாத்தில் இந்த முறை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகரவாசிகள், குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஹைதராபாத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) அறிவுறுத்தியுள்ளது.
கோடை காலத்தை விட பருவமழைக்கு நிகரான மழை பொழிவு காரணமாக, நகரம் கடும் நெருக்கடியுல் சிக்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ஏப்ரல் 1 முதல் 29 வரை, ஹைதராபாத் ஏற்கனவே 94 மிமீ மழையைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. இது வழக்கமாக வெறும் 20.9 மிமீ மழை என்ற அளவில் இருக்கும். மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்றைக் கொண்டுவரும் வானிலை நிகழ்வு இந்த திடீர் மழைக்குக் காரணம் என்று வானிலைத் துறை கூறுகிறது.
ஐஎம்டி-ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷ்ரவானி இந்த நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நாங்கள் பார்த்ததில்லை. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒரு சில நாட்களுக்கு மழை மட்டுமே பெய்தது, சராசரி மழைப்பொழிவு வெறும் 6.2 மிமீ மட்டுமே.” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ‘மசாஜ், படகு சவாரி’ ஒகேனக்கலில் களைகட்டும் கோடை விடுமுறை
கடந்த 2015 ஏப்ரலில் ஹைதராபாத்தில் சராசரி மழையளவு 97.4 மி.மீ ஆக இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. நகரத்தின் சராசரி ஏப்ரல் மழை நாட்கள் பொதுவாக இரண்டு மட்டுமே, ஆனால் இந்த ஆண்டு மொத்தம் எட்டு நாட்கள் மழை பெய்துள்ளது.
மழையினால் ஆச்சர்யம் டைந்துள்ள, பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார், "ஏப்ரலில் ஹைதராபாத் இந்த பசுமையாக இருக்கும் நாளை நான் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை!" மற்றொருவர், "மழை மிகவும் அதிகமாக உள்ளது, இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே வந்துவிட்டதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." அதே சமயத்தில், கன மழை தொடரும் என்பது குறித்த எச்சரிக்கையும் ஹைதரபாத் வானிலை என்னும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் கடைசி நாளில் நகரம் அதிக மழைக்கு தயாராகி வருவதால், IMD வானிலை ஆய்வு மையம்ன் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கனமழையில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. GHMC, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளது. மழை தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், உதவிகளை பெற 040-21111111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மழை விவரங்கள்
2015: 97.4 மி.மீ
2017: 18.5 மி.மீ
2018: 46.2 மி.மீ
2019: 36.1 மி.மீ
2020: 20.5 மி.மீ
2021: 23.7 மி.மீ
2022: 6.2 மி.மீ
2023: 94 மிமீ (ஏப்ரல் 29 வரை)
ஹைதராபாத்தில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளம் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகால குழுக்கள் மற்றும் அதிகாரிகள் முழு விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் 24 மணிநேரமும் வேலை செய்கிறார்கள்.
மேலும் படிக்க | பெங்களூரு - சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்
மேலும் பிடிக்க | OPS-NPS முக்கிய அப்டேட்: தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மாநில அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ