உத்தர பிரதேச மாநில பலியா மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதாகி ஜெய் எனக் கூறும் மாணவர்களை கடுமையாக தண்டிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தில்  உள்ள, முகமது அலி நினைவு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற தேசபக்தி வாசகங்களை கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறும் மாணவர்கள் தண்டிக்கப்படுவது குறித்த வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.


இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மானஸ் மந்திர் எனப்படும் சமூக நல அறக்கட்டளையின் மேலாளர் சிவகுமார் ஜெய்ஸ்வால், பள்ளியில் சென்று விசாரித்த போது, காலை நேர பிரார்த்தனைக்கு பின், தேசபக்தி வாசகங்களை கூறினால் தண்டிக்கப்படுவதாக, மாணவர்கள் கூறினர்.


இதுகுறித்து, அப்பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியர் ஒருவர் கூறிம்போது, பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள், முஸ்லிம்கள். பாரத் மாதாகி ஜெய் என்று கூறிய, ஒரு மாணவனை, ஜாவேத் அக்தர் என்ற ஆசிரியர், கொளுத்தும் வெயிலில், மைதானத்தில் பல மணி நேரம் நிறுத்தினார்.இவ்வாறு கூறினார்.