கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகிறது. இந்த தேர்வுகள் அடுத்த மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 15 ஆயிரத்து 387 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும்  4 லட்சத்து 52 ஆயிரத்து 732 மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 மாணவிகள் மற்றும் 3-ஆம் பாலினத்தவர் 4 பேர் என, 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.இதற்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜெல்லி’ மீன்களால் பறிபோன நீச்சல் வீராங்கனையின் கனவு.!


அதில், தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் அரசின் உத்தரவுப்படி சீருடை அணிந்தே தேர்வை எழுத வர வேண்டும் எனவும்,  ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், அவற்றின் நிர்வாகம் எந்த மாதிரியான சீருடை அணிந்து வருவதற்கு உத்தரவிட்டுள்ளதோ, அதன்படி மாணவ-மாணவிகள்  சீருடை அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவித்துள்ள அம்மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசின் உத்தரவையும், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. 


அதனால் அம்மாநில இஸ்லாமிய பள்ளி மாணவிகளிடையே கடும் ஆதங்கமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வை புறக்கணித்தால் மறு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது என்ற அறிவிப்பு அவர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் படிக்க | மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட கர்நாடக அரசு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR