கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள என்.எஸ்.ஜி எனப்படும் கருப்பு பூனைப்படை கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. என்.எஸ்.ஜி படையின் தற்போதைய தலைவராக உள்ள எஸ்.பி.சிங் பதவி வகித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அவர் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுதீப் லக்தாகியாவை என்.எஸ்.ஜி யின் புதிய தலைவராக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு நியமனம் செய்துள்ளது.  


இவர் அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த பணியில் நீடிப்பார்.  சுதீப் லக்தாகியா ஐ.பி.எஸ் அதிகாரியாக 1984-ல் பணியில் சேர்ந்தார்.