பட்டியல், பழங்குடியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை - உச்சநீதிமன்றம்
Supreme Court : இட ஒதுக்கீட்டில் பட்டியல், பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
Supreme Court verdic on internal reservation SC/ST : பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறது. உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் 14வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 6 நீதிபதிகள் ஒரே மாதிரியான ஒருமித்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நிலையில், நீதிபதி பெலா தீரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதனால், நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் இருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் உறுதி செய்திருக்கிறது.
பட்டியல் இனத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் அருந்ததியினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லும். இதற்கு எதிராக இந்த வழக்கு இருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமே உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளதால், இந்த உள்ஒதுக்கீட்டுக்கு இருந்த ஆபத்து நீங்கியுள்ளது.
மேலும் படிக்க | ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை அதிரடியாக ரத்து செய்ய UPSC!
உள்ஒதுக்கீடு வழக்கின் பின்னணி
பஞ்சாப், ஹரியானா தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு திமுக அரசு அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள்ளோதிக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.
ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று பஞ்சாப், ஹரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம் 7 நீதிபதிகள் அமர்வில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்து, அதில் பட்டியல் இனத்தவருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | மனைவிக்கு ஏன் குழந்தை பிறக்கல? ஸ்கேன் செய்த டாக்டர் ஷாக்கான கணவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ