ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை அதிரடியாக ரத்து செய்ய UPSC!

சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2024, 05:41 PM IST
  • ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் வேட்பு மனு ரத்து.
  • UPSC அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • எதிர்காலத் தேர்வுகளில் இருந்து அவரைத் தடை செய்கிறது.
ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை அதிரடியாக ரத்து செய்ய UPSC! title=

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேத்கரின் தேர்வை தற்போது ரத்து செய்துள்ளது தேர்வு முகமை. அடையாளத்தை மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இனி வருங்காலத்தில் தேர்வு எழுத நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வாளருக்கு வழங்கப்படும் அதிகபட்ச முயற்சிகளை பயன்படுத்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி செய்ததாக பூஜா கேத்கர் மீது UPSC குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய கமிஷன், "கடந்த ஜூலை 18ம் தேதி கேத்கரின் மோசடி நடவடிக்கைகளுக்காக ஷோ காஸ் நோட்டீஸ் (SCN) அளிக்கப்பட்டது. அவர் தனது அடையாளங்களை மாற்றி தேர்வு எழுதி இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Train Accident: கடந்த 13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்.. தொடரும் உயிர் பலிகள்!

34 வயதான பூஜா கேத்கர் ஷோ காஸ் நோட்டீஸ்க்கு பதிலளிக்க ஜூலை 25 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தனக்கு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டு இருந்தார், ஆனால் UPSC தரப்பில் ஜூலை 30 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. மேலும் இதற்கு பிறகு தேதி நீட்டிப்பு கொடுக்கப்படாது என்றும், இது உங்களுடைய இறுதி வாய்ப்பு என்று வலியுறுத்தியது. ஆனாலும் UPSC தரப்பில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் பூஜா கேத்கர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, பூஜா கேத்கர் CSE-2022 விதிகளை மீறியதை உறுதி செய்து, அவரது தற்காலிக வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. இனி வரும் காலத்தில் UPSC தேர்வு எழுதுவதில் இருந்தும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

puja

UPSC தேர்வில் மோசடியில் ஈடுபட்ட பூஜா கேத்கர் சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஐஏஎஸ் ஸ்கிரீனிங் செயல்முறையை முடித்த 15000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் தரவை UPSC முழுமையாக மதிப்பாய்வு செய்து வந்தது. தீவிரமாக நடைபெற்ற இந்த விசாரணையில் பூஜா கேத்கர் தவிர, வேறு யாரும் இந்த மோசடியை செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனது பெயரை மட்டும் இன்றி, பெற்றோரின் பெயரையும் மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் பூஜா கேத்கர். இந்நிலையில், எதிர்காலத்தில் வேறு யாரும் இது போன்ற மோசடியில் ஈடுபடாமல் இருக்க SOPகளை மேலும் வலுப்படுத்த UPSC செயல்பட்டு வருகிறது.

தற்போது விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மேலோட்டமாக மட்டுமே மறுஆய்வு செய்யப்படுகிறது என்று UPSC தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேல் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டி உள்ளதால் அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்வது சிரமமாக உள்ளதாக தெளிவுபடுத்துகிறது. சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன என்று UPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண்.. தமிழ் முகவரியுடன் ஆதார்! அடுத்தடுத்த மர்மம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News