ஆபாச நடன பார்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
மும்பை ஆபாச நடன பார்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
மும்பை ஆபாச நடன பார்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
மஹாராஸ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் ஆபாச நடன பார்கள் இயங்கி வந்தன. இந்த நடன பார்களில் நடக்கும் ஆபாசங்கள், கொலைகள் மற்றும் பித்தலாட்டங்களை தடுக்கும் வகையில், நடன பார் நடத்துவதற்கான அனுமதி பெறுவதில் பல விதிமுறைகளை கொண்டுவந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறையில் இருந்த பார்களையும் அடைத்தது.
கடந்த 2005 முதல் அமலில் இருந்த, மாநில அரசின் இந்த உத்தரவினால் நடன பார் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்க, மத்திய அரசின் உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடன பார் உரிமையாளர்கள் சங்கள் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்தல் இயலாத ஒன்று என கூறி நடன பார்களுக்கான சுதந்திரத்தினை அளித்துள்ளது.
மத்திய அரசின் விதிமுறைப்படி பார்களில் CCTV கேமிரா பொருத்தப்பட வேண்டும், ஆனால் நடன பார்களில் CCTV கேமராக்கள் பொருத்துவது தனி மனித உரிமைகளை மீறும் செயல். நடன பார்களில், மது பரிமாறுவதற்காக தனி இடம் ஒதுக்கக் கூறும் மாநில அரசின் உத்தரவு ஏற்கக் கூடியதாக இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் நடன அழகிகளுக்கு வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்குவது இயல்பான ஒன்று, அதற்கு கட்டுப்பாடு விதிக்கும் மாநில அரசின் உத்தரவு ஏற்க கூடியதாக இல்லை எனவும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பள்ளிகள் செயல்படும் இடங்களை சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் நடன பார் நடத்த முடியாது என மாநில அரசு கூறுவதையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் எந்த தடையும் இன்றி இனி பள்ளி, கல்லுாரி வளாகங்களுக்கு மிக அருகாமையில் கூட, ஆபாச நடனங்கள் அரங்கேறும் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.