மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்
![மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம் மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/11/18/203620-supreme-court-1.jpg?itok=lYREFJYy)
மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை உயர்நீதி மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை உயர்நீதி மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மும்பை நீதிமன்றத்தின் (Bombay High Court) நாக்பூர் கிளை12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்ற (Bombay High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது ஆடைக்கு மேல் தொட்டு தொந்திரவு செய்தல் அல்லது தாடவுதல், பாலியல் வன்முறை இல்லை என தீர்ப்பளித்திருந்தார்.
ALSO READ | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு
Direct skin to skin contact இல்லாததால் இதை போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வாராது என அவர் அளித்த வினோத தீர்ப்பு பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக, உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை செப்டம்பர் 30 ஆம் தேதி ஒத்திவைத்தது.
நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு சர்ச்சைக்குரிய மும்பை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. குற்றவாளிகளை சட்டத்தின் வலையில் இருந்து தப்ப அனுமதிக்கும் வகையில் சட்டம் இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது. மேலாடையை நீக்கமால் தொடுவதும் பாலியல் வன்முறை (Sexual Assault) தான் எனவும் அது போன்ற வழக்குகளை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் எனவும் தீர்ப்பு அளித்திருந்தார்.
மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!
தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ளன. ஆனால் இந்த பத்தாண்டுகளின் முடிவில் அதாவது 9 ஆண்டுகளுக்குள் இவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும். ஆனால் இந்த நேரத்தில் பல செயற்கைக்கோள்களும் பயனற்றதாகிவிடும். அவற்றை அழிப்பதும் உலகிற்கு பெரும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR