COVID-19: ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் சனிக்கிழமை (மே 8, 2021) ஒரு தேசிய அளவிலான பணிக்குழுவை அமைத்தது.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை, படுக்கை பற்றாக்குறை ஆகிய புகார்கள் எழுது வருவதை அடுத்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதையும் விநியோகிப்பதையும் மதிப்பிடும் தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை (மே 8, 2021) அமைத்தது.
மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்குவதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், பணிக்குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்காள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பபாடோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான இந்த பணிக்குழு, கோவிட் -19 (COVID) சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்யும்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் இந்த குழுவில் அங்கம் வகிப்பார். அதோடு, தேசிய பணிக்குழுவிற்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமை தாங்குவார்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
மற்ற உறுப்பினர்களில் தில்லி மருத்துவமனை மருத்துவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர், பெங்களூரின் நாராயணா ஹெல்த்கேர் மற்றும் மும்பையின் ஃபோர்டிஸ் மருத்துவமனை ஆகியவற்றின் முக்கிய மருத்துவர்கள் ஆகியோர் அடங்குவர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 4,01,217 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,86,556 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சுமார் 37 லட்சம் பேர் சிகிச்சையில் (Corona Treatment) உள்ளனர்.
ALSO READ | மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR