மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்ஆர் காந்தி வெற்றி பெற்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2021, 03:47 PM IST
  • நாடு முழுவதும், கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கி, மக்கள் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
  • தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்ஆர் காந்தி வெற்றி பெற்றார்.
மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை title=

நாடு முழுவதும், கொரோனா தொற்று இரண்டாவது அலை  தொடங்கி, மக்கள் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை என பல விதமான புகார்கள் எழுந்து வருகின்றன. பிரச்சனையை தீர்க்க மத்திய மாநில அரசுகள், தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

அது மட்டுமல்லாது, தனியார், தொழில் துறையினர் தன்னார்லர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சட்ட பேரவைத் தேர்தலில், நாகர் கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி (MR Gandhi), தனது தொகுதி மக்களுக்கு உதவ  உடனே களம் இறங்கிய பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி, தொகுதியில் தொடர்ந்து பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார். கொரோனா பாதிப்புகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

அதை அடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இப்பதை அறிந்த எம்எல்ஏ எம்ஆர் காந்தி, உடனடியாக, இஸ்ரோ (ISRO) தலைவர் சிவனை தொடர்பு கொண்டு, நாகர்கோவிலுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பாஜக எம் எல் ஏ எம்ஆர் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இஸ்ரோ (ISRO) மகேந்திரகிரி நிறுவனம் ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.

கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள இஸ்ரோ நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, தனது சமூக வலைதள ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக (BJP) எம்எல்ஏ எம்ஆர் காந்தி.

 

ALSO READ | மேற்கு வங்க வன்முறையை எதிர்த்து குரல் கொடுத்த வானதி சீனிவாசன் கைது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News