உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், RT-PCR போன்ற கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அனுமதி அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. நிர்வாகமும் அரசாங்கமும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.
கொரோனா வைரஸ் (Corona Virus) இரண்டாவது அலையில் பலருக்கு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில், மருத்துவ இயந்திரங்கள், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என பலவித மருத்துவ வசதிகளுக்கு குறைபாடு ஏற்பட்டு வருகின்றது.
பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளும், பிற வசதிகளும் குறைந்துகொண்டே வருகின்றன. பல பொது இடங்கள் தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
நாட்டின் தலைநகர் டெல்லியிலும் கொரோனாவின் கோர தாண்டவம் பல நாட்களாக தொடர்கிறது. டெல்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான (Oxygen Cylinders) தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் படுத்துக் கிடப்பதைப் பார்க்க மனம் பதைக்கிறது.
ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்
இந்த நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், RT-PCR போன்ற கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அனுமதி அளித்துள்ளார்.
அடுத்த மாதம், அதாவது மே மாதம் 7 ஆம் தேதியிலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற வளாகத்தை கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வளாகத்தில் சுமார் 60 படுக்கை வசதிகளை உருவாக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அளிப்பதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் கலந்தாலோசிக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் (Delhi) மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் மக்கள் அலைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், உச்சநீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது!!
ALSO READ: Coronavirus Restrictions: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR