அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் தயார்.. மின்னஞ்சல் அனுப்ப CJI உத்தவு
Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி: சிறையில் உள்ள வழக்கறிஞர்களை வாரத்திற்கு 5 முறை சந்திக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த சில நாட்களாக அமலாக்கத் துறையின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி கலால் கொள்கை வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை மார்ச் 21 அன்று கைது செய்தது. பின்னர் நீதிமன்றம் அவரை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தனித்தனியாக இரண்டு முறை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். அப்பொழுது அவரை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்
இதனையடுத்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வரும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று (ஏப்ரல் 9, செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரது மனுவை நிராகரித்தது. அதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் கெஜ்ரிவாலின் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்கும் -சவுரப் பரத்வாஜ்
இந்த விவகாரம் பற்றி பேசிய ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ், கலால் கொள்கையை ஊழல் என்று கூறுவது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியை ஒழிப்பதற்கான அரசியல் சதி என்று கூறினார். சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியது போல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என்று முழு நம்பிக்கை இருப்பதாக சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.
முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்த அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால்
அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமார் ஆகியோர் திகார் சிறையில் அவரை சந்தித்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் கெஜ்ரிவாலுடன் அவர் சந்தித்த முதல் சந்திப்பு இதுவாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின்படி, ஒரு கைதி வாரத்திற்கு இரண்டு முறை பார்வையாளர்களை நேருக்கு நேர் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்திக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ