அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் 118 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு திறக்க, மொபைல் போன் இணைப்பு பெற உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, தனி நபரின் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாக கூறி பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தற்காலிகமாக தடை விதித்து, கடந்த மே மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. 


இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 'அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று தனிமனித சுதந்திரம். இதனை ஆதார் மீறுவதாக உள்ளது' என அந்த அமர்வு ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. 


இதையடுத்து, தனிநபரின் விபரங்களை பகிர்வது அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 


இந்த அமர்வு வழக்கை விசாரித்து முடித்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 26 அன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அந்த தீர்ப்பில், ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது..!