விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு
கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக உச்ச நீதி மன்ரம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.
பொதுத்துறை வங்கிகளில் , ₹9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். லண்டனுக்கு சென்ற அவர் மீது CBI மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் அவரை இங்கிலாந்தில் இருந்து விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வரை இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதை மீறி, 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான நிதி பரிவர்த்தனையை விஜய் மல்லையா மேற்கொண்டார்.
இது தொடர்பான வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவா் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என கூறியது. எனினும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தனது உத்தரவை மார்ச் 10 அன்று ஒத்திவைத்தது.
மேலும் படிக்க | விஜய் மல்லையாவுக்கு சிக்கல்; பங்களாவை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு மல்லையாவுக்கு ரூ.2,000 அபராதம் மற்றும் நான்கு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தண்டனையை அறிவித்த உச்ச நீதிமன்றம், மல்லையா தனது நடத்தைக்காக எந்த விதமான வருத்தம் காட்டவில்லை என்றும், தண்டனை விசாரணையின் போது ஆஜராகவில்லை என்றும் கூறியது. "சட்டத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்த" அவருக்கு தக்க தண்டனை விதிக்கப்பட்டு, ஆணையை நிறைவேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியது.
எனவே, நான்கு வாரங்களுக்குள் 8 சதவீத வட்டியுடன் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை டெபாசிட் செய்யுமாறு மல்லையாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது, தவறினால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது. இது விஜய் மல்லையாவுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR