நியூடெல்லி: ஆம் ஆத்மி கட்சி  எம்பி சஞ்சய் சிங், நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியின் (Aam Aadmi Party) எம்பி சஞ்சய் சிங் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் "கட்டுப்பாடற்ற நடத்தை"க்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை எதிர்த்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரவு நேரத்திலும், போராட்டம் தொடர்வதால், தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



திங்கள்கிழமை பிற்பகல் அவை கூடியதும், இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை நேர கூட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தினர்.


இருப்பினும், மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் சபை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார், மூன்று முதல் நான்கு கேள்விகள் மட்டுமே எடுக்கப்பட்டபோது, ஆம் ஆத்மி எம்பி, அவையின் மையத்திற்கு அருகே சென்று விரிவான விவாதம் கோரி கோஷங்களை எழுப்பத் தொடங்கினார்.


மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!


பின்னர் அவரை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அவைத்தலைவர் பியூஷ் கோயல் முன்வைத்தார், இது குரல் வாக்கெடுப்பு மூலம் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு முன், மாநிலங்களவைத் தலைவர் தன்கர், சிங்கின் "கட்டுப்பாடற்ற நடத்தைக்கு" பெயரிட்டு அவரை எச்சரித்தார்.


இருந்த போதிலும், ஆம் ஆத்மி கட்சியின் ஆர்எஸ் எம்பி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதோடு, தனது இருக்கைக்கு திரும்பவில்லை.


திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர், அதைத் தொடர்ந்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


மேலும் படிக்க | கமல் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பகீர் குற்றச்சாட்டு!


இதற்கிடையில், மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து மக்களவையில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள் ஏன் தயாராக இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மூத்த பாரதிய ஜனதா கட்சி (BJP) எம்.பியும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மணிப்பூர் பிரச்சினையில் நாட்டின் முன் 'உண்மை வெளிவருவது முக்கியம்' என்று கூறி, விவாதத்திற்கு அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் மக்களவை மூன்று முறை ஒத்திவைத்த பிறகுக், மதியம் 2.30 மணிக்கு சபை மீண்டும் கூடியவுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த விரும்புவதாக அமித் ஷா கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் அறிக்கையை வெளியிடக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.


மேலும் படிக்க | இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ