தனது உடல்நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.


இதனிடையே, அமெரிக்காவில் கேசினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 


இந்நிலையில், ரஜினியின் கேசினோ விசிட் பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டார் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவை:-


வாவ்! 420 ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்ட விடுதியில் வைத்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அமலாக்கத்துறை அவரிடம் இருக்கும் பணம் எப்படி வந்தது என்று விசாரிக்க வேண்டும்.” 


 



 


என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.