கார்த்திகை மாதம் என்றாலே மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியான மாதம் என்று கூறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, பக்கதர்களுக்கு ஒரு சிறப்பான மதமாகவும் அமைகிறது. கார்த்திகை மாதம் வந்தாலே, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு சென்று வருவது வழக்கம்.


இந்த ஆண்டில், வெள்ளிக்கிழமை (இன்று முதல்) விரதம் தொடங்குகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐய்யப்பன் சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதில் அதிகம் ஆர்வத்துடனும் அதிக எண்ணிக்கையிலும் இருக்கின்றனர். இன்று பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


துளசி, சந்தானம், ருத்ராட்ச மாலைகள் ரூ.25 முதல் ரூ.130 வரையிலும், கருப்பு மற்றும் காவி நிற வேட்டிகள் ரூ.150 முதலான விலைகளில் விற்கப்படுகின்றது என்றும் வியாபாரிகள் கூறினார். விற்பனை இன்றைக்கு அமோகமாக போகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.