புதுடெல்லி: 861.90 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் ஏல நடைமுறையில் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்டுக்கு (Tata Projects Limited) வெற்றி கிடைத்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. L&T Ltd 865 கோடி ரூபாய்க்கான ஏலத் தொகையை குறிப்பிட்டிருந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Central Vista redevelopment project என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படும். புதிய கட்டடம் 21 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.


"புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் வென்றுள்ளது" என்று அதிகாரி ஒருவர் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடமானது, Parliament House Estate பகுதியின் 118 வது plotஇலேயே வரும் என்று மத்திய பொதுப்பணித் துறை (CPWD) தெரிவித்துள்ளது. கட்டமைப்புப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் தற்போதுள்ள கட்டடம் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது.


தற்போதைய கட்டமைப்பானது "அளவுக்கு அதிகப்படியான பயன்பாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறது" என்று கூறிய மத்திய அரசு, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான முன்மொழிவை முன்வைத்தது.


நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைத்த பின்னர் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR