டாடா ஸ்டீல் நிறுவன மேலாளரை சுட்டுக்கொன்ற முன்னாள் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், தனது மேலாளரை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


டாடா ஸ்டீல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைப்பதற்கான கிடங்கு ஒன்று ஃபரிதாபாத்தில் இயங்கி வருகிறது. அங்கு 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய விஷ்வாஸ் பாண்டே என்பவர் ஒழுங்கீனமாக நடந்ததாகக் கூறி, அவரை மேலாளர் அரிந்தம்பால் பணி நீக்கம் செய்துள்ளார். 


இதையடுத்து, தனக்கு மீண்டும் வேலை தரக்கோரி, அடிக்கடி அலுவலகத்துக்கு வந்த விஷ்வாஸ் பாண்டே, நேற்றும் மேலாளர் அரிந்தம் பாலை சந்திக்க சென்றுள்ளார். அரிந்தம்பால் அறைக்குள் சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அரிந்தம்பாலை நோக்கி 5 ரவுண்டுகள் சுட்ட விஷ்வாஸ் பாண்டே அங்கிருந்து தப்பியோடினார். 



ரத்த வெள்ளத்தில் சரிந்த மேலாளர் அரிந்தம்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, நிர்வாகத்தில் போருத்தபட்டிருந்த சிசிடிவி கேமிராவை பரிசோதித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விஷ்வாஸ் பாண்டேவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.