மத்திய அரசு ஆட்சி புரிந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சில தினங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தனர்.நேற்று, ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தது.


அந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு நேற்று தெரிவித்த நிலையில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் ஒரே கட்சி தாங்கள் தான், என ஆந்திர மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், உடனடியாக கூட்டணியில் இருந்து விலகி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் நிலைக்கு சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும், தாங்களே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் முடிவெடுத்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


இந்த தீர்மானத்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு இது பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.