புது டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.


யாருக்கு எந்த இலாகா என்று நேற்று அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில், இன்று மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு.....!!


அமைச்சரவை பட்டியல்:-


1. பாஜக தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமனம்.


2. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்.


3. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


4. நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சராக நியமனம்..


5. சட்டத்துறை அமைச்சராக ரவி சங்கர் பிரசாத் நியமனம்.


6. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்.


7. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரி நியமனம்.


8. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்.


9. ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை மற்றும் ஜவுளித்துறை ஒதுக்கீடு.


10. ரயில்வே அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம்.


11. பெட்ரோலிய துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமனம்.


12. சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷாவர்த்தன் நியமனம்.


13. உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் நியமனம்


14. சமூக நலத்துறை அமைச்சராக தாவர் சந்த் கெலோட் நியமனம்.


15. ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக சதானந்த கவுடா நியமனம்.


16. வேளாண்மை துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமர் நியமனம்.


17. ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் மனித வள அபிவிருத்தி அமைச்சராக நியமனம்.


18. அர்ஜுன் முண்டா பழங்குடியினர் விவகார அமைச்சராக நியமனம்.


19. ஸ்ரீ முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மை விவகார அமைச்சராக நியமனம்.


20. நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக ஸ்ரீ பிரகாத் ஜோஷி நியமனம்.


21. திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்துறை அமைச்சராக டாக்டர் மகேந்திரநாத் பாண்டே நியமனம்.


22. அர்விந்த் கணபதி சாவந்த் கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை அமைச்சராக நியமனம்.


23. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம். அமைச்சராக ஸ்ரீ கிரிராஜ் சிங் நியமனம்.


24.  ஜல் சக்தி துறை அமைச்சராக ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் நியமனம்.