பீகார் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஷ்வி யாதவ், முதலமைச்சர் நிதீஷ்குமார் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர்களால் நான் கண்காணிக்கப்படுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேஜாஷ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டார், அதில், 'சிஎம் வீடு மூன்று பக்கங்களிலும் பிரதான சாலைகளால் சூழப்பட்டுள்ளது. நான்காவது பக்கம் எதிர்க்கட்சித் தலைவரின் வீடு உள்ளது. ஆனால் சி.சி.டி.வி கேமரா தனது அரசியல் எதிர்ப்பாளரின் பக்கம் வைக்க வேண்டியது ஏன்? அப்படி வைப்பது தான் அவசியம் என்று முதல்வர் கருதுகிறாரா? யாராவது அவருக்கு புரிய வைக்க வேண்டும், இந்த தந்திரம் பயனற்றது என்று.


 



மேலும் அவர், இந்த சிசிடிவி கேமரா பாதுகாப்பு காரணமாக வைக்கபட்டதா? இல்லை என் மீது உள்ள அச்சத்தில், என்னை உளவு பார்க்க வைக்கப்பட்டதா? அவரிடம் (நிதீஷ்குமார்) இந்த சி.சி.டி.வி கேமராவை நிறுவ வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே அங்கு ஒரு போலீஸ் சோதனைசாவடி உள்ளது. 


 



மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பீகார் முதலைமைச்சர் நிதீஷ்குமார் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இதன்மூலம் மீண்டும் பீகார் அரசியலில் பரபரபப்பு ஏற்பட்டு உள்ளது. இவரின் குற்றச்சாட்டு குறித்து நிதீஷ்குமார் தரப்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.