தான் பேசியது தேவையற்றது.. வாபஸ் பெறுகிறேன்: பின்வாங்கிய பாஜக எம்பி!
இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மர் மடத்தின் பரியாமத்தின் நிறைவு நிகழ்ச்சியான விஸ்வர்பணம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தேசிய தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, இந்து மதத்தின் மத மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்ற ஒரு மறுமாற்ற செயல்முறையை உருவாக்குவது அவசியம் என்று வலியுறுத்தினார். அதாவது இந்துக்கள் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்று தேஜஸ்வி சூர்யாகூறினார்.
ஜனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற எண்ணிக்கையின் பலம் தீர்மானிப்பது போல, மக்கள்தொகை ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது. இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவது தான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே வழி. இந்து மதம் புத்துயிர் பெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கோயிலும் மடத்திலும், மறுமாற்ற செயல்முறையை மேற்கொள்ள இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று எம்.பி தேஜஸ்வி சூர்யா கூறினார்.
இந்துக்களை மதமாற்றம் செய்வதை நிறுத்தினால் மட்டும் போதாது, ஆனால் இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
ALSO READ | இந்து மதத்தை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் மதமாற்ற வேண்டும்: பாஜக எம்.பி சர்ச்சை
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள். மதமாற்றத் தடைச் சட்டம், தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது என்ற காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை மேற்கோள் காட்டி பேசினார்.
இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலர் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், இளம் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது கருத்து குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘பாரதத்தில் இந்து மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் பேசினேன்.
எனது உரையின் சில கருத்துக்கள் தவிர்க்க முடியாத சர்ச்சையை வருந்தத்தக்க வகையில் உருவாக்கியுள்ளன. எனவே தான் பேசிய அந்த கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன் என தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு? சீமான் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR