Telangana Elections 2023: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் அங்கு பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 119 தொகுதிகளில் சுமார் 60 தொகுதிகள் தனிப்பெரும்பான்மைக்கு தேவையாகும். பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் இருந்தாலும், பிஆர்எஸ் காங்கிரஸ் இடையேதான் தற்போது கடும் போட்டி நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாஜ் கிருஷ்ணா ஹோட்டல்... 


கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை பிற கட்சிகளிடம் இருந்து பாதுகாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா உருவான பின் தற்போது முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், தெலுங்கானாவில் கட்சிக்கு தெளிவான வெற்றி கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தயை கருத்துக் கணிப்பகள் தெரிவித்திருந்தன. இதனால், மூத்த தலைவர்களை ஒன்றாக வைத்திருக்கவும் அக்கட்சியின் மேலிடம் விரும்புகிறது. 


ஒவ்வொரு சட்டப்பேரவை வேட்பாளருக்கும் ஒருவர் ஊழியரை வைத்து அவர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்காக எனவும் அவை தகவல் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | I.N.D.I.A கூட்டணியில் பலத்தை நிரூபிக்க தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் காங்கிரஸ்


கேசிஆர் பாணி...


இதுபோன்ற பிரச்னைகளை சமாளிப்பதில் வல்லவர், சிவக்குமார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,"எனது எம்எல்ஏக்கள் மீதும், தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றியின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கட்சியின் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி மாற்றுவது சாத்தியமில்லை" என்றார். 


ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணாவில் நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் குறித்து தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கிரண் குமார் சாமலா கூறுகையில், "கே.சி.ஆர் பாணி செயல்பாடு, வேட்டையாடுவது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், ஆனால் இன்று முடிவைப் பார்த்த பிறகு, இதுபோன்ற செயல்பாடு தேவையில்லை. ஏனென்றால் குறைந்தபட்சம் 80க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்..." என்றார். 



தெலங்கானாவில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரையும், கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அழைத்து வருமாறு அவரது கட்சி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிவக்குமார் அதனை மறுத்தார். 


மேலும் படிக்க | முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ