2 ஆண்டுகள் நிறைவு செய்தது தெலுங்கானா மாநிலம்
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா என தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கைக்காக எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய முதலைமைச்சர் சந்திரசேகரராவ் 2௦௦1-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கி தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் நடந்தினார். இதற்காக உண்ணாவிரதங்கள் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு எடுத்தது. தெலுங்கானா தனி மாநில மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலும் வழங்கினார். இதையடுத்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவானது.
தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதலைமைச்சர் சந்திரசேகரராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தலைநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள் டுவிட்டரில் தெலுங்கானா மாநில சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலம் வேகமாக முன்னேற என் வாழ்த்துக்கள் என தெலுங்கானா மக்களுக்கு தமது வாழ்த்துகளை கூறியுள்ளார்.