Telangana Lockdown Updates: தெலுங்கானா அரசு, மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கவும், ஜூலை 1 முதல் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கவும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (சனிக்கிழமை) மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தின் போது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் கோவிட் -19 தொற்று குறைந்துள்ளதாகவும், இப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ALSO READ |  கோவையில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி


மேலும் அண்டை மாநிலங்களில் தொற்று பரவல் மற்றும் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும் தெலுங்கானா அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


ஜூலை 1 முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறக்க கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கும் முடிவைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் வருகை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதல்களைத் தயாரித்து அதை விரைவில் வெளியிடுமாறு அமைச்சரவை கல்வித் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், பொது மக்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும் என அமைச்சரவை கேட்டுக்கொண்டு உள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவூட்டப்பட்டு உள்ளது. 


ALSO READ |  Corona Update: இந்தியாவில் 27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது


தெலுங்கானாவில் இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி,  1,362 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,556 ஆகவும், மொத்த பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,12,196 ஆகவும் உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR