கோவையில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி

கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 06:09 AM IST
  • கோவை மாநகராட்சிப் பகுதியில் அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு அமல்
  • கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை
  • மூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்துக்கொள்ள அனுமதி
கோவையில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி title=

கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

கோவை (Coimbatore) மாநகராட்சிப் பகுதியில் அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேரக் கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்

அதே சமயம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசாணை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அரசு முதன்மை செயலாளரின் கடிதத்தின்படி மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறபட்டு உள்ளது. 

முன்னதாக தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு போடபட்டு உள்ளது. இதனால் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தற்போது காய்கறிகளை வாகனத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்யத் தமிழக அரசு உதிரவிடப்பட்டு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News