அரியவகை பாம்புகளை கடத்தி சமூக ஊடகம் மூலம் விற்பனை செய்ய முயன்ற தெலுங்கானா இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த திங்கட்கிழமையன்று இரண்டு மலை பாம்புகளுடன் எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தா சேர்ந்த இளைஞரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


 


ஹைதரபாத் அருகே சவ்தர்குடா பகுதியைச் சேர்ந்த ஷரோன் மோசஸ் என்ற இளைஞன், மலைப்பாம்பின் குட்டியை தனது நண்பன் கழுத்தில் போட்ட புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், தங்களிடம் மலைபாம்பு மற்றும் கொம்பேரி மூக்கன் ஆகிய 2 பாம்புகள் விற்பனைக்கு இருப்பதாகவும் தெரிவத்துள்ளார்.


இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், போலீஸ் உதவியுடன் சென்று ஷரோன் மோசஸ் மற்றும் அவனது நண்பன் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 பாம்புகளையும் வனத்துறையினர் மீட்டனர். 


இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தெலுங்கானாவை சேர்ந்த மேத்சால் மாவட்டத்தில் வசிக்கும் ஷாரண் மோசஸ் மற்றும் அவரது நண்பன் வனோரோஸ் பிரவீன் ஆகிய இருவரும் இணைந்து பாம்புகளை விற்க முயன்றதாகவும், பாம்பை வாங்க முன் வந்தவர்களை கவர்வதற்க்காகத்தான் பிரவீன் பாம்புகளை கழுத்தில் சுற்றியபடி  புகைப்படம் எடுத்து அதை முகநூலிலும் மற்றும் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததாக கூறினார்.



இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் 1972 ஆம் ஆண்டில் வனசீவராசிகள் பாதுகாப்பு சட்டம் (Registration Act) கீழ் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மலைப்பாம்பு என்பது ஒரு அட்டவணை - I இனங்கள், மற்றும் உடைமை மற்றும் சட்டவிரோத வர்த்தகம் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் குறைந்தபட்ச அபராதம் ரூ. 10,000, விதித்துள்ளனர்.