ரூ.70-க்கு பெட்ரோலை விற்கத் தயார், ஆனால்?... மத்திய அரசை சாடிய தெலங்கானா அமைச்சர்
மத்திய அரசு செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.70-க்கு விற்பனை செய்ய முடியுமென தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மீதான வரியைக் குறைத்ததாகவும், ஆனால் சில மாநிலங்கள் மத்திய அரசு வலியுறுத்தியும் வரியைக் குறைக்கவில்லை எனவும் கூறினார்.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி முறையை முறையைப் பின்பற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசு தான் காரணம் - பிரதமர் மோடி விமர்சனம்
தெலுங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான கே.டி.ராமாராவ் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை ரத்து செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.70-க்கும், டீசலை ரூ.60-க்கும் விற்கலாம் எனக் கூறியுள்ளார். மத்திய அரசின் வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு செல்வதாக பிரதமர் கூறியதைக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு விதித்துள்ள செஸ் வரியால் 2022-23-ம் நிதியாண்டில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 41 சதவீத வருவாய் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார். தங்களுக்கு 29.6 சதவீத வரி வருவாய் மட்டுமே கிடைப்பதாகவும், செஸ் வரியாக 11.4 சதவீத வரி வருவாயை மத்திய அரசு கொள்ளையடிப்பதாகவும் கே.டி.ராமாராவ் குற்றம் சாட்டினார்.
மாநிலங்கள் வரியை உயர்த்தாத நிலையில், அதனை குறைக்க வேண்டுமென பிரதமர் கூறுவது எந்த விதமான கூட்டாட்சித் தத்துவம் எனக் கேள்வி எழுப்பிய அவர், ஒரே நாடு -ஒரே விலை என செஸ் வரியை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு மாநிலங்களே காரணம், நிலக்கரி பற்றாக்குறைக்கு மாநிலங்களே காரணம், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே காரணம் என அனைத்திற்கும் மாநிலங்களைக் குற்றம் சாட்டிவிட்டு, பிரதமர் மோடி பொறுப்பான பதிலளிக்க மறுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், எரிபொருள் மீதான வரி வருவாயில் 68 சதவீதம் மத்திய அரசுக்கே செல்வதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கூட்டாட்சி முறை என்பது அனைவரையும் ஒத்துழைக்க வைப்பதல்ல, வற்புறுத்திப் பெறுவது எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் எவ்வளவு உயரும்? அதிர்ச்சி தகவல்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR