இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் எவ்வளவு உயரும்? அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இனிவரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 02:19 PM IST
  • இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது.
  • சென்னை போன்ற நகரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.112.51 என்று உயர்ந்தது.
  • இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் எவ்வளவு உயரும்? அதிர்ச்சி தகவல்! title=

கடந்த 17 நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலையானது, இன்னும் சில நாட்களுக்கு இதேபோல் இருக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  மார்ச் மாதத்தில் உச்சத்திலிருந்த கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இனிவரும் நாட்களில் சில்லறை பெட்ரோல் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் அரசாங்கம் சுங்க வரிகளை குறைத்தால் மட்டுமே பெட்ரோலின் சில்லறை விற்பனையிலும் குறைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.  கடந்த 17 நாட்களில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 14 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! உயர்கிறது ரயில்வே கட்டணம் 

மார்ச் 21 அன்று டெல்லியில் ரூ.95.41 ஆக இருந்த பெட்ரோல் விலை ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் ரூ.105.41 ஆக அதிகரித்தது.  அதனைத்தொடர்ந்து மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.120.51, ரூ.115.12 மற்றும் ரூ.110.85 என்று உயர்ந்தது.  கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு கிட்டத்தட்ட 138 நாட்களுக்கும் மேல் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கவில்லை, பண்டிகை தினத்தையொட்டி சுங்க வரியும், விஏடி வரியும் குறைக்கப்பட்டது

இந்த இரண்டு வரிக் குறைப்புகளுக்குப் பிறகு, உத்திரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதால், பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்து வந்தது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பரில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $70.6 இருந்து $83.6 வரை அதிகரித்தது.  இது டெல்லியில் அந்த லிட்டருக்கு ரூ.101.34லிருந்து ரூ.109.69 ஆக அதிகரித்தது.

மேலும் ஜனவரி 2022 க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து, இறக்குமதி செலவுகளும் உயர்ந்தது.  இதனைத் தொடர்ந்து ஜனவரி மற்றும் மார்ச் 2022க்குள், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $77லிருந்து $102 வரை அதிகரித்தது.  டெல்லியில் சில்லறை பெட்ரோல் விலையில் சுங்க வரி 27% உள்ளது. ரூ.100 மதிப்புள்ள பெட்ரோலுக்கு, வாடிக்கையாளர் வரியாக ரூ.27 செலுத்தவேண்டும்.  கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அரசு சுங்க வரியை நிர்ணயித்து வந்தது.  தற்போது கச்சா விலை அதிகமாக இருப்பதால் சுங்க வரி மற்றும் விஏடி வரிகளை குறைத்தால் மட்டுமே பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க | உலகிலேயே இந்தியாவில்தான் சிலிண்டர் விலை அதிகம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News