தராபாத்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பைக் மூலம் சுற்றுப்பயணம் செய்த தெலுங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நான்கு பெண்கள் சுமார் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா பயணம் சென்றனர். இவர்கள் நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லை வழியே மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளனர். 


இதை தொடர்ந்து தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் வங்கதேசத்தில் மொத்தம் 16,992 கி.மீ தூரம் வரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். 


இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குனர் மனோகர் கூறுகையில்.....!  


வேறு எந்த மாநிலமும் இதுவரை செய்யாத இந்த இப்படிப்பட்ட தனித்துவமான பயணத்தை மேற்கொண்டதும் இல்லை. இது பயணம் மூலம் பெண்கள் மிகவும் சந்தோசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் என்பவர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர். 


இவர் இந்த சுற்று பயணம் பற்றி கூறுகையில்......! 


நான் வித்தியாசமாக விஷயங்களை மட்டும் தான் நான் தேர்ந்தெடுப்பேன். என்னை தனித்துவமாக காட்ட இந்த சுற்றுப்பயணம் ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது. என்னால் எந்த சவாளையும் எதிர்கொள்ள முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.