அல்லு அர்ஜுனுக்கு தொடரும் நெருக்கடி! 20 கோடி கொடுக்க வலியுறுத்தல்!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்குமாறு அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படம் இந்த மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது. புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். இது தெலுங்கானாவில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி அல்லு அர்ஜுனுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் வீட்டில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தை சார்ந்த சிலர் கற்களை வீசி போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | விடுதலை பாகம் 2 படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா!!
இந்நிலையில் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் எறிந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று ஏற்கனவே அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார். தற்போது, தெலங்கானாவின் சாலைகள் மற்றும் கட்டிட துறை அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 20 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். புஷ்பா 2 படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. எனவே, இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணிசமான தொகை கொடுப்பதில் தப்பில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
காவல்துறையின் முன்னெச்சரிக்கைகளை மீறி புஷ்பா படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டு உள்ளார். சந்தியா தியேட்டருக்கு வர வேண்டாம் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் அதை காதில் வாங்காமல் அல்லு அர்ஜுன் காரில் இருந்து அனைவருக்கும் சைகை செய்துள்ளார். இதுதான் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி ஒரு மரணத்திற்கு வழி வகுத்துள்ளது. மேலும் இறந்த பெண்ணின் மகனும் மூளைச்சாவடைந்து உயிருக்கு போராடி வருகிறார். படம் முடிந்த பின்பு தான் அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு கிளம்பி உள்ளார், அல்லு அர்ஜுன் செய்தது சரியில்லை என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.
இது நடிகரின் அறியாமை மற்றும் அலட்சியத்தினால் ஏற்பட்டுள்ளது. புஷ்பா 2 படம் 2,000 கோடி வசூல், 3,000 கோடி வசூல் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 கோடி இழப்பீடு வழங்குவது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏன் அவர்களால் குறைந்தது 20 கோடி ரூபாய் கொடுக்க முடியவில்லை? அல்லு அர்ஜுனுக்கும், படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது கோரிக்கை இதுதான். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அமைச்சர் அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி வலியுறுத்தினார். கடந்த 13ம் தேதி விசாரணைக்காக நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்ட அல்லு அர்ஜுன், இன்று மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | 2024-ல் பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள்! லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ