Viduthalai 2 Box Office Collection : விடுதலை 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த படம் 1 நாளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது தெரியுமா?
Viduthalai 2 Box Office Collection : விடுதலை பாகம் 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதியான நேற்று வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வெற்றிமாறனின் வெற்றிப்படங்களில் இந்த படமும் ஒன்றாக இருக்கிறது. இப்படம், முதல் நாளிலேயே எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?
விடுதலை 2 படம், விஜய் சேதுபதி நடித்துள்ள வாத்தியார் கதாப்பாத்திரத்தின் கதையை பேசுகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கதாப்பாத்திரம் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமாக இருந்தது, விஜய் சேதுபதியின் வாத்தியார் பாத்திரம்.
விடுதலை 2 படத்தில் வாத்தியார் கேரக்டரின் கதையை வைத்துதான் படம் நகர்கிறது. இது, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்றும் சொல்லப்படுகிறது.
விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும் பெரிய ப்ளஸ்ஸாக அமைந்திருக்கிறது இளையராஜாவின் பின்னணி இசை.
விடுதலை 2 படம், உலகளவில் வெளியானாலும் தமிழகத்தில்தான் இதற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.
இப்படம், முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.8 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் வீக்-எண்ட் என்பதால் இந்த வசூல் அதிகமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 படத்தின் வசூல் குறித்த தகவல் உண்மைதானா என்பது தெரியவில்லை.