ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை தொடர்வதற்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கமே காரணம் என்று தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமையின்மை ஏற்பட்டது. அப்போது நவ்காம் செக்டாரில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஒரு பயங்கரவாதியான பகதூர் அலியை ராணுவம் கைது செய்தது. பின்னர் பகதூர் அலி தேசிய புலனாய்விடம் ஒப்படைக்கப்பட்டான். தேசிய புலனாய்வு பிரிவு பகதூர் அலிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டு உள்ளான். விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 


பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை தொடர்வதற்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கமே காரணம் என்று தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை பிரிவு, காஷ்மீரில் அமைதியின்மை 33 நாட்களாக நீடித்து வருவதில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதத்தின் பங்கு தொடர்பான ஆதாரங்களை தொடர்ந்து சேகரித்து வருவதாக கூறி உள்ளது.


ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி பகதூர் அலி பேசும் வீடியோவை தேசிய புலனாய்வு பிரிவு வெளியிட்டு உள்ளது. பஞ்சாபி மொழியில் பேசும் பயங்கரவாதி பகதூர் அலி, பாகிஸ்தானில் உள்ள தன்னுடைய குடும்பம் பற்றியும், பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றது பற்றியும், எல்லையை தாண்டி இந்தியாவிற்கு வந்தது பற்றியும் பேசுகிறான்.