ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர் தாக்குதல் நடத்தின.. தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.