நடிகை கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு பாயுமா? பரபரப்பு பேட்டியின் எதிரொலி
புதிய சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்! கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
தலைவி திரைப்படத்தில் நடித்ததால் அண்மையில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த கங்கனா ரனாவத், எப்போதுமே தனது மனதில் தோன்றுவதை சொல்லும் இயல்பு கொண்டவர். இதன் விளைவாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கும் கங்கனா, சில தினங்களுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது, பத்ம விருதாளர் என்ற முறையில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
அவருக்கு விருது வழங்கியதே ஒரு விவகாரமாக பேசப்பட்ட நிலையில், தானே ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி மீண்டும் எதிர்மறை விமர்சனங்களுடன் செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார் பத்மஸ்ரீ கங்கனா ரனாவத்!
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு நடிகை கங்கனா அளித்த பேட்டியில், இந்தியா 2014 இல் உண்மையான சுதந்திரம் அடைந்தது என்றும், 1947 இல் கிடைத்தது 'பிச்சை' என்றும் கூறினார். இந்த கருத்து அனைவரின் உணர்வுகளையும் தூண்டிய நிலையில், பாஜக எம்பி வருண் காந்தியும் கூட கங்கனாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
ALSO READ | 2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்! கங்கனா ரனாத்திற்கு பத்மஸ்ரீ விருது!
கங்கனாவின் கருத்து மிகவும் தவறானது, நாட்டையே அவமானப்படுத்தும் செயல் என்று கூறி, ஆம் ஆத்மி உறுப்பினர் ப்ரீத்தி ஷர்மா மேனன் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மும்பை காவல்துறையிடம் விண்ணப்பம் ப்ரீத்தி ஷர்மா புகார் அளித்தார்.
புகாரளித்த பிறகு அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் ப்ரீத்தி ஷர்மா, புகாரின் நகலையும் பதிவிட்டுள்ளார். கங்கனாவின் கருத்து, சட்டத்தின் 504, 505 மற்றும் 124A ஆகிய பிரிவுகளின் கீழ் தேசத்துரோகம் என்றும் ப்ரீதி கூறுகிறார்.
அண்மையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனாவின் கருத்துக்கு, மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் எம்.பி.யாக இருக்கும் வருண் காந்தியும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த கருத்து, அவமதிப்பு மற்றும் தேசத்துரோகம் என்று தெரிவித்தார்.
கங்கனா ரனாவத் நான்கு தேசிய விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிடுவதாக பலர் டிவிட்டருக்கு புகாரளித்ததை அடுத்து, கங்கனாவின் கணக்கை டிவிட்டர் முடக்கிவிட்டது.
Also Read | 'அடிப்படையில் நிர்வாணமாக' இருந்த பெண் அணிந்திருந்த உடை இது! வைரலாகும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR