ஆடை அணிவது என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை. முழு உடலையும் போர்த்திக் கொள்வதோ, இறுக்கமான ஆடைகளை அணிவதோ ஒரு பெண்ணின் விருப்பம்.
எவ்வளவு காலமானாலும், பெண்களின் ஆடை குறித்த விமர்சனங்களும், அதற்கான எதிர்விளைவுகளும் எக்காலத்தில் மாறாது போலும் என்று உணர்த்துகிறது இந்த வீடியோ.
‘நீ, 'அடிப்படையில் நிர்வாணமாக' இருக்கிறாய்’ என்று சொல்லி ஒரு பெண்ணை கடையில் இருந்து வெளியேற்ற முயன்ற வீடியோ வைரலாகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் கடைக்காரரை பலரும் கண்டிக்கின்றனர்.
Also Read | ஏம்மா.. உனக்கு விளையாட வேற ஆள் கிடைக்கலயா?
ஆடை அணியும் சுதந்திரம் என்று சொல்வதால், இது இந்தியாவை சேர்ந்த வீடியோ என்று நினைத்துவிட வேண்டாம். இந்த ‘வேற லெவல்’ சம்பவம் நடைபெற்றது கலாச்சாரத்தை போற்றிக் காக்கும் இந்தியாவில் அல்ல, நவீன நாகரீகத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் தான்.
இங்கிலாந்தில் ஒரு பெண்ணின் ஆடையைப் பற்றி விமர்ச்சிக்கிறார்கள், அதிலும் 'அடிப்படையில் நிர்வாணம்' என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு, வேற லெவல் வீடியோ என்று தப்புக் கணக்கும் போடாமல், இந்த வீடியோவைப் பார்த்தால், உண்மையில் கடைக்காரரை நீங்களும் திட்டுவீர்கள்.
So tonight in @asda @AsdaServiceTeam isle of dogs store I was told by an employee that I wasn’t wearing enough clothes, i wasn’t respecting myself, that I’m basically naked and I shouldn’t be in there. Honestly the most disgusting behaviour pic.twitter.com/sZKFewzvNQ
— jaiah (@jaiahfern) November 9, 2021
ஆனால் உண்மையில் உடலை முழுவதும் மூடும் வகையில் டீஷர்டும், பேண்டும் அணிந்து, மேலே ஒரு க்ராப் டாப்பும் அணிந்திருந்தார் பாதிக்கப்பட்ட பெண். ஆனால் உரிய முறையில் ஆடை அணியாமல் இல்லாமல் ஷாப்பிங் செய்ததற்காக supermarket streak ASDA, தன்னை வெளியேற்ற முயற்சித்தது என்று பாதிக்கப்பட்ட பெண் Jaiah கூறுகிறார். இந்த சம்பவம் வெறும் குற்றச்சாட்டு அல்ல, இதற்குக் ஆதாரமாக வீடியோவும் இருப்பதால், பார்க்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தான் சரியாக ஆடை அணியவில்லை என்று சொல்லும் பணியாளருக்கு, தான், ஸ்வெட்பேண்ட் மற்றும் ஹூடி அணிந்திருப்பதைச் சொல்லி சமாதானப்படுத்த முயல்கிறார்.
அதற்கு ASDA பணியாளர் சொன்ன பதில் பார்ப்பவர்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது. "உங்கள் உடலை ஏறக்குறைய முழுதுமாக பார்க்கமுடிகிறது. மேலாளரை கூப்பிடுகிறேன்" என்று சொல்கிறார் பணியாளர்.
‘உங்களுக்கு சுயமரியாதை இல்லை” என்றும் அந்த கலாச்சார காவலராக அவதாரம் எடுத்த பணியாளர் சொன்னதாக Jaiah கூறுகிறார். அதுமட்டுமல்ல, "உங்களுக்கு சுயமரியாதை இல்லாததால் அல்ல, ASDA இல் எங்களுக்கு என ஒரு கொள்கை உள்ளது, அதனால் உங்களை வெளியேறச் சொல்கிறேன்" என்று பணியாளர் சொல்லியிருக்கிறார்.
READ ALSO | சம்சார சாகரத்தில் சிக்குவதற்கு முன்னரே, நீர்வீழ்ச்சியில் சிக்கிக் கொண்ட மணமக்கள்
இந்த முழு சம்பவத்தின் வீடியோவையும் Jaiah ட்விட்டரில் வெளியிட்டார்: "இன்றிரவு ASDA, Isle of Dogs இல், நான் போதுமான ஆடைகளை அணியவில்லை, நான், என்னை மதிக்கவில்லை என்று ஊழியர் என்னிடம் கூறினார். அடிப்படையில் நிர்வாணமாக இருக்கும் நான் அங்கு இருக்கக்கூடாதாம்! இது உண்மையில் மிகவும் கேவலமான நடத்தை" என்று பாதிக்கப்பட்ட பெண் Jaiah தனது பதிவில் எழுதியுள்ளார்.
இதற்கிடையில், ASDA சூப்பர் மார்க்கெட், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதுடன், இந்த விவகாரம் தொடர்பாக ஊழியரிடம் விசாரணையையும் தொடங்கியுள்ளது.
”இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன் கடையில் விசாரணையை மேற்கொண்டோம். ஊழியர் சொன்னது எங்கள் நிறுவனத்தின் கொள்கையல்ல என்பதை விளக்கவும், ஊழியரால் மன வருத்தம் அடைந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கவும் Jaiahவை தொடர்பு கொண்டோம்" என்று சூப்பர் மார்க்கெட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடும், ஊரும் கலாசாரமும் வேறுபட்டாலும், பெண்கள் ஆடை அணிவது தொடர்பான கவலை ஆண்களுக்கு எப்போதுமே இருந்துக் கொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை நிதர்சனமாக நிரூபிக்கும் மற்றுமொரு சம்பவம் இது...
Also Read | ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுடா! பிளிரும் சிங்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR