2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்! கங்கனா ரனாத்திற்கு பத்மஸ்ரீ விருது!

2020ம் ஆண்டிற்க்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2021, 12:58 PM IST
2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்! கங்கனா ரனாத்திற்கு பத்மஸ்ரீ விருது! title=

டெல்லி :  இந்திய அரசானது 1954-ம் ஆண்டிலிருந்து தன் நாட்டு குடிமக்களில் பெரும் சாதனைகளை படைத்தவர்களுக்கு உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது தான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயர்ந்த விருதாகும்.  இதற்கு அடுத்தபடியாக இருப்பவை பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளாகும். இவை "பத்ம விருதுகள்" என்று அழைக்கப்படுகிறது.அதாவது அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு இவ்விருதுகள் அறிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் விழா நடத்தி இந்த விருதினை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான 119 பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.  தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து,இந்த விழாவில் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த 119 விருதுகள் பட்டியலில் 7 பத்மவிபூஷன் விருதுகளும், 10 பத்மபூஷன் விருதுகளும், 102 பத்மஸ்ரீ விருதுகளும் இடம் பெற்றுள்ளன. இதில் பேட்மிடன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகை கங்கனா ரனாத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.  மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மகள் பன்சுரி என்பவர் விருதினை பெற்றுக் கொண்டுள்ளார்.

 

 

மேலும் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவிற்கு பத்மஸ்ரீ விருதும்,பிண்ணனி பாடகி சித்ராவிற்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. கூடைப்பந்து வீராங்கனை பி.அனிதாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ALSO READ நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் கேல் ரத்னாவிற்கு பரிந்துரை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News