காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது என குமாரசாமி காட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.


இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்தது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டார்.


இதை தொடர்ந்து, கர்நாடக அரசு இதுவரை தனது பகுதிநேர உறுப்பினரை பரிந்துரக்காததா அடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அறிவித்து மத்திய அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.


இந்நிலையில், இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது...! 


காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் என கூறினார்.


மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் கலந்து ஆலோசிக்காமல் ஆணையம் அமைக்கப்ட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.