இந்தியாவில் முதன் முதலாக தொடங்கும் பெருங்காயம் சாகுபடியும் அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களும்..!!!
இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் பெருங்காயம். இது இதுவரை இந்தியாவில் சாகுபடி செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமான தகவல் தான் இல்லையா. இப்போது, இதனை சாகுபடி செய்து இதை இறக்குமதி செய்யும் செலவை மிச்சப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடில்லி: இந்தியா முதன்முறையாக பெருங்காய சாகுபடியைத் தொடங்குகிறது. இதனால், பெருங்காயம் இறக்குமதி செய்ய ஆகும் செலவான சுமார் 900 கோடி ரூபாய் மிச்சமாகும்
இந்திய (India) உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் பெருங்காயம். இது இதுவரை இந்தியாவில் சாகுபடி செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமான தகவல் தான் இல்லையா. இப்போது, இதனை சாகுபடி செய்து இதை இறக்குமதி செய்யும் செலவை மிச்சப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய சமையலுக்கு இன்றியமையாத பொருளாக இருக்கும் பெருங்காயம், ஆப்கானிஸ்தான் (Afghanistan), ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் 1,200 டன் என்ற அளவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், இந்தியா ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருந்து சுமார் 1500 டன் பெருங்காயத்தை இறக்குமதி செய்தது இதற்காக சுமார் 942 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
ALSO READ | வேளாண் சட்டத்தை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கு சட்ட விபரம் தெரியவில்லை: ஆய்வு
பெருங்காயம் சாகுபடி செய்ய, இமாச்சலப் பிரதேசத்தின் (Himachal pradesh) லஹோல் பள்ளத்தாக்கு பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இமயமலை பயோசோர்ஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (Himalayan Bioresource Technology -IHBT) இன் முயற்சியால், பிராந்தியத்தின் தொலைதூரத்தில் உள்ள குளிர்ந்த பாலைவன பகுதிகளில் உள்ள பரந்த தரிசு நிலம் இதற்காக பயன்படுத்தப்படுகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) தெரிவித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி, இந்தியாவில் அதன் சாகுபடி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் விதமாக லஹோல் பள்ளத்தாக்கின் குவாரிங் கிராமத்தில் பெருங்காயத்தின் முதல் நாற்று நடப்பட்டது.
இந்த பயிர் சாகுபடிக்கு நாட்டில் பெருங்காயம் சாகுபடி செய்ய தேவையான நடவுப் பொருட்களின் பற்றாக்குறை பெரும் தடையாக இருப்பதாக CSIR தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு CSIR, பெருங்காய விதைகளை வாங்கி தனது ஆய்வகங்களில் அதன் வேளாண் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், நாட்டை தற்சார்பு (Athamnirbhar) பொருளாதாரமாக மாற்றி, உள்நாட்டில் தொழில் மற்றும் விவசாய துறைகளை மேம்படுத்துவதாகும். இதனால், உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு. இந்தியாவும் தற்சார்பு நிலையை நோக்கி செல்லும்.
ALSO READ | கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா அசத்துகிறது என Bill Gates புகழாரம்..!!!
மேலும், இது விவசாயிகளுக்கு பெரும் லாபம் தரும் தொழிலாக இருக்கும் என IHBT கூறியுள்ளது.
பெருங்காய சாகுபடிக்கு, குளிர்ச்சியான, அதே நேரத்தில் வறண்ட பகுதி தேவை. எனவே, இமயமலைப் பகுதியின் குளிர்ந்த பாலைவனப் பகுதிகள் - லடாக் மற்றும் இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் பெருங்காய சாகுபடிக்கு ஏற்ற இடங்களாகும். மேலும் பெருங்காய சாகுபடி இந்த பிராந்தியங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR