சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலைக்கு அனைத்துவயது பெண்களும் போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று இறுதியில் இந்து அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் பாதி வழியில் திரும்பினர். போலீசார் பாதுகாப்பில் சென்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டக்காரர்கள் பெண்களை உள்ளே அனுமதிக்காமல் அந்த இடத்தில் அமர்ந்துடீ தர்ணா போராட்டம் நடத்தி அவர்களை திரும்பி செல்ல வைக்கும் நிலைமை தான் அங்கு நிலவுகிறது. 
 
தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் பாதுகாப்பு கருதி நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 



இந்த சூழ்நிலையில், சபரிமலை கோவில் வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.