Back To Home: கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவரின் கடைசி முக நூல் பதிவு
துபாயில் இருந்து தாயகம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடம் விமானம் ஏறியவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்ற மன நிம்மதியுடன் பயணத்தை தொடங்கினர்.
துபாயில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறோம் என்ற கனவுடன் புறப்பட்டனர் பயணிகள். ஆனால், துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ALSO READ | Air India Plane crash: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?
இந்த கோர விபத்தில் இறந்த கேரளாவில் குன்னமங்கலத்தை சேர்ந்த ஷ்ரஃபு பிலசேரி என்பவர், விமானம் புறப்படும் முன்னர், தாயகம் திரும்புகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் “ Back to home” என தனது ஃபேஸ் புக் கணக்கில் பதிவு செய்தார். அது தான் அவருடைய கடைசி முகநூல் பதிவாக ஆகி போனது அனைவரின் மனதையும் உருக்கியது.
பிலசேரி தனது மனைவி மற்றும் மகளுடன் தாயகம் திரும்பி கொண்டிருந்தார். சொந்த ஊருக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் பயணித்த அவர்களுக்கு, தங்களுக்கு நேரப்போகும் சோகத்தை பற்றி தெரியவில்லை.
அவர் தனது கடைசி முக நூல் போஸ்ட்டில், விமானத்தில் பாதுகாப்பிற்கு முக ஷீல்ட் அணிந்து கொண்டிருக்கும் தனது குடும்ப புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்தார்.
ALSO READ | Air India Plane Crash: விமானத்தை ஓட்டியவர் MiG விமானங்களை ஓட்டிய ஒரு அனுபவமிக்க Pilot!!
இதில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அந்த விமானத்தின் கேப்டன் தீபக் வி சாத்தே, இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியாவார். இவர் அம்பாலாவில் 17 ஆவது படைப்பிரிவில் MiG -21 போர் விமானத்தை ஓட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிக திறமையான போர் விமான பைலட்டாக இருந்துள்ளார்.
விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் தங்களால் ஆன வரை விமானத்தை விபத்திலிருந்து காக்க முயன்றுள்ளார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் முறை தரை இறங்க சூழல் சரியில்லாததால், அந்த முயற்சியை கைவிட்டு விட்டு, பைலட்டுகள் இரண்டாவது முறை முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களால் பாதுகாப்பாக தரை இறங்கும் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.