ஆர்பிஐ : அடுத்த கவர்னர் யார்?
ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பாரா? இல்லையா? என்று விவாதங்கள் நடைப்பெற்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தாம் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
ரகுராம் ராஜனின் முடிவு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதே சமயத்தில் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யார் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த கவர்னர் யார்? என்கிற பட்டியலில் ஒன்பது நபர்களின் பெயர் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உர்ஜித் படேல், பாரத ஸ்டேட் வங்கியின் அருந்ததி பட்டாச்சார்யா, முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னரான ராகேஷ் மோகன், சுபிர் கோக் ரன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லாஹ்ரி, தேசிய பங்குச் சந்தையின் தலைவரான அசோக் சாவ்லா, பொருளாதார அறிஞரான விஜய் கேல்கர், பொருளாதார விவகாரங்களுக்கான துறையில் செயலாளர் சக்திகாந்த தாஸ், தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் என இந்த ஒன்பது பேரில் ஒருவர்தான் அடுத்த ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.