இறந்த நாய்க்கு 11-ம் நாள் காரியம் செய்து விருந்து வைத்து நபர்!
நாய் இறந்த 11-ம் நாளில் இப்பகுதியில் உள்ள 500 பேரை அழைத்து நாயின் நினைவாக உணவு பரிமாறியுள்ளனர்
ஒடிசா : ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் பத்ரக் பகுதியில் சம்பி என்ற பெண் நாய் அப்பகுதியிலுள்ள கடைக்காரர்களின் செல்லப்பிராணியாக உலா வந்தது.
இங்குள்ள கடைகளில் பெரும்பாலும் துரித வகை உணவுகளே கிடைக்கும். இதில் சுஷாந்த் பிஸ்வால் என்ற கடை உரிமையாளரிடம் சம்பி என்ற நாய் 13 வருடங்களுக்கு முன்பு குட்டியாக வந்து சேர்ந்தது. அப்போது முதல் பிஸ்வால், நாயை வளர்த்து வந்தார். தன்னுடைய மகள் என்றே நாயை அவர் அன்போடு பராமரித்து வந்தார். பிஸ்வால் வீட்டில் வளர்ந்தாலும் பத்ரக் டவுன் முழுவதும் உள்ள கடைக்காரர்களின் அன்புக்கு பாத்திரமாக இருந்தது சம்பி.
இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி இந்த நாய் திடீரென இறந்துவிட்டது.நாயின் பிரிவை தாங்க முடியாமல் கடைக்காரர்கள் சோகத்துடன் இருந்தனர். இந்நிலையில் நாய் இறந்த 11-வது நாளில் பத்ரக் பகுதியில் உள்ள 500 பேரை அழைத்து உணவு பரிமாறியுள்ளனர்.
இதுகுறித்து நாயின் உரிமையாளர் சுஷாந்த் பிஸ்வால் கூறும்போது, "13 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடமிருந்து குட்டியாக இந்த நாயை வாங்கினேன். என்னுடைய மகளாக நினைத்து சம்பியை வளர்த்து வந்தேன். இந்தப் பகுதியிலுள்ள நாய்களை விட இது வித்தியாசமாகவும், பாசமாகவும் இருந்தது. மற்ற தெரு நாய்களுடன் இது சேரவே சேராது.
இரவு நேரங்களில் எனது கடையின் உள்ளே படுத்து தூங்கும். என்னுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தது. இதன் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. நாய் இறந்த 11-ம் நாளில் இப்பகுதியில் உள்ள 500 பேரை அழைத்து நாயின் நினைவாக உணவு பரிமாறினோம். கடையின் முன்பு நாயின் புகைப்படத்தை பேனராக வைத்துள்ளோம். இதற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்" என்றார்.
ALSO READ பெண்களின் ஆடைகளை இலவசமாக துவைக்க வேண்டும்! நீதிமன்றத்தின் வித்தியாச தீர்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR