மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் கோடை கால தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில், ரவி சர்மா என்ற போலீஸ் கான்ஸ்டபிளும் பணியில் இருந்துள்ளார். அப்போது, 6 வயது சிறுவன் ஒருவர் கான்ஸ்டபிளிடம் வந்து, 'பசிக்கிறது, உணவு வாங்க காசு இல்லை' எனக் கூறி, பணம் கேட்டுள்ளார். அதற்கு ‘பணம் இல்லை போடா’ என்று காவலர் ரவி கூறி, சிறுவனை விரட்டி விட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சிறுவன், அதே கான்ஸ்டபிளிடம் வந்து பணம் கேட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!


இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் ரவி, சிறுவனை அடித்து, கழுத்தை நெரித்துள்ளார். இதில் நிலைக்குலைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் ரவி, என்ன செய்வதென்று புரியாமல் சிறுவனின் உடலை காரின் பின்புறம் யாருக்கும் தெரியாமல் போட்டு மறைத்துள்ளார். திருவிழாவின் இடையே யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய காவலர் ரவி, குவாலியருக்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியில், ஆளில்லாத இடமாக பார்த்து சிறுவனின் உடலை வீசி விட்டுச்சென்றுள்ளார். இதையடுத்து, சிறுவனைக் காணாததால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.


இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காவலர் ரவி சர்மா அந்த வழியே காரில் சென்றது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "ததியா பகுதியில் நடந்த தேர் திருவிழாவுக்கு சென்று விட்டு, 2 கான்ஸ்டபிள்களுடன் காரில் அந்த வழியே வந்தேன். அவ்வளவுதான்" என்று பதில் அளித்துள்ளார். தொடர்ந்து காவலர் ரவியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். அதில், "திருவிழாவின் போது கடும் மனஅழுத்தத்தில் இருந்தேன். தொடர்ந்து சிறுவன் பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் எரிச்சலைந்து தாக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். 
இதையடுத்து, ததியா எஸ்பி அமன் சிங் ரத்தோர், ரவியை உடனடியாக பணியில் இருந்து நீக்கும்படி காவலர் தலைமையகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 


 


மேலும் படிக்க | பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??


 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR